புரியாதோர் பேர் உலகில்
தனித்தீவென நான் மிதக்க
புதுச்சிறகு விரித்து ஓர் குருவி
முதன்முறை தாவிப் பறந்தார்போல்
இராகங்கள் காற்றில் மெருக
மேளத்தின் ஓசை ததும்பி நிறைய
கைகளினது தாளத்தினோடு
தலைகளும் மெல்ல அசைந்தாடின
மெல்ல நானும் என் உலகம் துறந்தேன்
ஒலியின் வடிவம் கண்டேன்
அவை ஓதிய ரகசியம் கேட்டேன்
மெல்லியதோர் புன்னகையுடன் கலந்திருந்தேன்.
No comments:
Post a Comment