Saturday, November 24, 2012

அவள் (she)


இளவேனில் காலத்தில் விரிந்த முல்லை மொட்டு 
இளம் பருவத்தில் நாம் கொண்ட மாசின்மை 
பெரும் கடலாய் உருகிய உறை பனிப்பாறை  
இவை காட்டினும் புனிதமே அவளின் அன்பு - தாய்!



ilavenil kaalathil virintha mullai mottu
ilam paruvathil naam konda maasinmai
perum kadalaai urugiya urai panippaarai
ivai kaatinum punithame avalin anbu - thaai! 


Wednesday, October 31, 2012

கனவு (Dreams)











நான் கண்ட கனவு என்றும் வாழ்க்கை இனிப்பதற்கு 
கண்ணாடி ஜன்னல் கண்ட கனவு வெண்கதிர் ஒளிர்வதற்கு 
துளி நீர் கண்ட கனவு நிலைகொண்ட குளத்தில் கலப்பதற்கு 
பசும் புல் கண்ட கனவு பாதையில்லா ஓரத்தில் விளைவதற்கு 

தீ கண்ட கனவு ஈரப்பிசுக்கில்லா வரண்ட விறகுக்கு
கார் கண்ட கனவு ஓயாமல் இடிக்கும் மின்னலுக்கு 
மழலை கண்ட கனவு தாய் மார்பின் கதகதப்பிற்கு 
மனைவி கண்ட கனவு கணவனின் இடைவிடா அன்பிற்கு 

தோள் கண்ட கனவு நண்பனின் மன ஆறுதலுக்கு 
கல் கண்ட கனவு காலங்கள் பல கழிவதற்கு 
கனவு கண்ட கனவு அனைத்துமே நிகழ்வதற்கு 
நிகழ்வு  கண்ட கனவு நடக்கவிருப்பது நன்றாக நடப்பதற்கு 

- பிரியதர்சினி செல்வகணேசன் 

Wednesday, October 17, 2012

இழப்பு (Death)

The loss we incur, when our dearest one passes away is too huge to bear. Some react to such losses with grief and some with anger. Here is an adaptation for one such huge loss, that i might face sometime in my life, which i dread to think of, which i hope shall never occur as long as i live, which as a loss shall fury me to burn this whole world into ashes. The verse is focused on Yaman (the God of death).

அதோ! அங்கே அவன் 
என் கண்ணில் தென்பட்டான் 
மனம் கோபத்தில் புரள 
நாளத்தில் குருதி சீறியது.

எழுந்தேன் முரட்டு வெறியுடன் 
எளிதில் அடங்கும் வெறியல்ல 
ஐயிரு சிங்கங்கள், இறைச்சியை 
பேய்த்துக் கொணர்வது போன்றொரு வெறி 

விழி பிதுங்கியது சீற்றத்தில் 
வெறும் அவனின் உருவத்தின் காட்சியே 
என் இரைப்பையை இறுக்கியது

பின்னங்கால் தொடை அடிக்க 
ஓடிப் பாய்ந்து கவ்வினேன் 
பிடரியில் அவன் மூச்சுக்குழலை 

"உறிந்து விட்டாயடா, அவள் உயிரை 
யாரென்று நினைத்தாய் அவளை? 
என் காரணமடா அவள்!
இயலாது! உன்னை விட இயலாது! 
எப்படி மாய்ப்பது உன் அற்ப உயிரை?

ஆயிரம் பாம்பின் நஞ்சு கொண்டு உன்னைச் சிதைப்பதா?
சிவனின் சூலத்தால் செருகி உன்னை ஒழிப்பதா?
அல்ல, எரிமீனை உன்மேல் ஏய்தி சாம்பலாக்குவதா?
அன்று! உன் முடிவை நீ எளிதில் கிட்டுவதன்று!

இதோ! என் கண்ணீர்!
சிதறுகிறேன் உன்மேலே 
மடிவாயடா! உன்னைச் சுட்டுப் பொறிக்கும்
இவ்வெந்நீரில் அவிந்து சாவாயடா!"



- Priyadharshini Selvaganesan
(of love for Saroja Selvaganesan)

Monday, October 15, 2012

தொலைந்தனவே..

கரையும் மேகம் போல பறந்தனவே காலங்கள்!
அம்மையின் தோளில் சாய்ந்து கிடந்து கண்ட இனிய கனவுகள் எங்கே?
தந்தையின் விரலை எட்டிப் பிடித்து கொண்டு, உலா சென்ற பாதைகள் எங்கே?
முத்தத்தில் தேங்கிய மழை நீரில் அண்ணன் விட்ட காகிதக் கப்பல் எங்கே?
அவர்கள் அனைவரும் பேணிய என் மாசில்லா மழழைப் பருவம் எங்கே?


Monday, September 17, 2012

இராகம் (music)

புரியாதோர் பேர் உலகில் 
தனித்தீவென நான் மிதக்க 
புதுச்சிறகு விரித்து ஓர் குருவி 
முதன்முறை தாவிப் பறந்தார்போல்

இராகங்கள் காற்றில் மெருக  
மேளத்தின் ஓசை ததும்பி நிறைய 
கைகளினது தாளத்தினோடு 
தலைகளும் மெல்ல அசைந்தாடின 

மெல்ல நானும் என் உலகம் துறந்தேன் 
ஒலியின் வடிவம் கண்டேன் 
அவை ஓதிய ரகசியம் கேட்டேன் 
மெல்லியதோர் புன்னகையுடன் கலந்திருந்தேன்.

Monday, September 3, 2012

பிரியவளின் கவிதைக் காதல் - மறைவு (Clouded)

இருண்டு விரிந்து இருந்த காலம் அது
வெறுமையின் அழகும் ரசிக்கப்பட்டது 
நான் எனது தனிமையை பேணி 
மகிழ்ந்திருக்கும் பொழுது வந்தாய் நீ!

தூரத்தில் ஒளி தெரிய 
கண் விழிகளால் கூர்ந்து கண்டேன். 
நான் காணும் சிரமம் குறைக்க 
நீயும் சிறிது மறைவின்றி நின்றாய். 

உனது துணிவை நான் வேடிக்கையாக ரசிக்க, 
முன் சிறிது கோபம் கொண்டாய் 
பின் சிறிது வெட்கம் சூடினாய்
அதனால் உன்னை மறைத்தும் கொண்டாய்! 

வியந்தேன் உன் சிணுங்கலைக் கண்டு 
நாணினேன் என் உணர்வற்ற திறனால்
சிரித்தேன் உன் நளினத்தை எண்ணி 
எதிர்பார்த்திருந்தேன் என் வரத்தின் வருகைக்கு. 

நொடிகள் நீண்டு நிமிடம் ஆயின 
வருவாய் என்றெண்ணி காத்திருந்தேன்.
நிமிடங்கள்  நீண்டு  மணி நேரம் ஆயின
எனது தவிப்பு நிரந்தரமோ என்று கவலைக்கொண்டேன்.

வாழ்க்கை எனக்கு அங்கு நிற்கவில்லை 
அன்றாட பணிகளில் ஈர்ந்து சென்றேன்.
வெகு விரைவில் உன்னை மீண்டும் கண்டேன் 
அன்றுள்ள விழிகள் ஏனோ இன்று மீண்டும் இல்லை.

மன்னிப்பாயோ என் அழகு நிலவே?