செவத்த தோலு வாழும் தேசம்
வெயில் காயும் புழுக்கம் கூடும்.
ஊதல் காத்தும் தழுவி போற
வளர்ந்த மண்ணு வாசம் தேடும்.
தேடி பிடிச்சு சம்பாதிச்ச
பொருளும் அறிவும் தீர்க்கவில்ல-
அறிஞ்ச பேச்சும் சிரிப்பும் அற்ற
தனிமை தரும் காய்ச்சல் நோய்ய.
சொந்த இடம் விட்டதால
உறவுமுறை மறந்து தூரம் போச்சு.
சேர்ந்த இடம் வசதி இருந்தும்
இரண்டாம் தாரம்னு துச்சம் ஆச்சு.
மனிதர் இல்லா நிழல்கள் கொண்ட
கனவும் நினைவும் கலந்த வாழ்க்கை-
தாவி தாவி தான் என்ன பயன்னு
கானல் நீரையும் புளிக்கச்செய்யும்.
sevaththa thoallu vaazhum thesam
veyil kaayum puzhukkam koodum.
oothal kaaththum thazhuvi pora
valarntha mannu vaasam thedum.
thedi pidichu sambaathichcha
porulum arivum theerkkavilla-
arinja pechum sirippum atra
thanimai tharum kaaichal noiyya.
sontha edam vittathaala
uravumurai maranthu thooram pochu.
saerntha edam vasathi irunthum
erandam thaaramnu thuchcham aachu.
manithar illaa nizhalgal konda
kanavum ninaivum kalantha vaazhkkai-
thaavi thaavi thaan enna payannu
kaanal neerayum pulikka cheyyum.




