Thursday, January 31, 2013

பிரியவளின் கவிதைக் காதல் (crude crush)
















நெஞ்சைத் தொட்டுச் சென்றாய் 
கொஞ்சம் கேலி செய்தாய் 
மோதிக் கொண்டு நின்றாய் 
காதல் என்று சொன்னாய்

வானம் பார்த்து நின்றேன் 
மௌனம் பூத்து நின்றேன் 
விண்மீன் காணவில்லை 
உந்தன் முகம் பார்த்தேன்

பாதை நீண்டு நிற்க 
வழிகள் காணவில்லை 
எண்ணம் கொட்டித்தீர்க்க 
மொழியொன் றிங்கில்லை 

மேகம் போலே கொஞ்சம் 
பாவை கொண்ட நெஞ்சம் 
கரைந்து பறந்து செல்ல 
தடையேதும் இன்றில்லை..

nenjai thottu sendraai
konjam geli seithaai
moathikkondu nindraai
kaathal endru sonnaai

vaanam paarthu nindraen
mounam poothu nindraen
vinmeen kaanavillai
unthan mugam paarthaen

paathai neendu nirkka
vazhigal kaanavillai
ennam kotti theerkka
mozhi ondru ingillai

megam poale konjam
paavai konda nenjam
karainthu paranthu sella
thadai ethum indrillai..

Disclaimer: To friends and relatives - this is purely fictional.



2 comments: