Tuesday, January 22, 2013

சிநேகிதி (friend)



சில நேரம் உன்னை எண்ணுவேன்
வரட்டும் கோடையில் சிலிர்த்திடும்
மெல்லிய மழை போல என்
மனமும் சிறிது குளிர்ந்திருக்கும்.

ஓர் குருதி தமக்கையருள்ளும்
கொத்து கொலுசு மணிகளில் போட்டியாம்
நாம் கொண்ட போட்டியோ - சத்தம்
சிந்தும் மணி போன்ற சிரிப்போசையில்.

நினைவிருக்கிறதா?
அலுமினியச் சொப்பு சாமான் கொண்டு
களி மண்ணும் மணிக்கொடியிலையும் அரைத்து
நான் செய்தக் கூட்டுக் குழம்பினை
ரசித்து உச்சுக் கொட்டி நீ உண்ணுவாய்

இன்று நான் கருப்பட்டி உறுக்கி
ஏலக்காய் மணக்க பொங்கல் தான் செய்தாலும்
அதற்கு இணையாகுமா?

நினைவிருக்கிறதா?
ஐந்தாம் வகுப்பில் பெருமை கொண்டு
பாரதியின் பெண்மணிகளென்று
நாம் கூவிக் கொண்டாடிய
பெண்ணுரிமைக் கட்டுரைகள்

கெட்டொழிந்த இந்த சமூகத்தில்
இமயத்தையும் பிளக்கும் அக்குறல்
என்னிட மில்லையே இன்று. நினைவிருக்கிறதா?

நாம் எங்கும் கை கோர்த்து சென்றோம்
பிரித்திட இயலாத் தோழிகளென
இன்று, கையொப்பத்தில் உன் பெயருக்குப்
பின்னாலிருப்பது உன் தந்தை பெயர் தானா
என்று கூட நானறியேனே..

sila neram unnai ennuvaen
varattum kodaiyil silirthidum
melliya malai pola en
manamum sirithu kulirnthirukum

oar kuruthi thamakaiyarullum
kothu golisu manigalil poatiyaam
naam konda poatiyo - saththam
sinthum mani pondra siriposaiyil

ninaivirukiratha?
aluminiya choppu saamaan kondu
kali mannum manikkodi ilaiyum araithu
naan seitha kootu kulambinai
rasithu uchu kotti nee unnuvaai

indru naan karupetti urukki
yelakkaai manakka pongal thaan
seithaalum, atharku inaiyaaguma?

ninaivirukiratha?
ayinthaam vaguppil
perumai kondu
baarathiyin pen manigal endru
naam koovikkondaadiya
pennurimaik katturaigal

kettolintha intha samoogathil
imaiyathayum pilakkum akkural
ennidam illaye indru

ninaivirukiratha?
naam engum kai korthu sendroam
pirithida iyala thoaligal ena
indru, kaioppathil un peyarukku
pinnal iruppathu un thanthai peyarthaana
endru kooda naan ariyaenae...

No comments:

Post a Comment