Monday, January 28, 2013

பேதை பாவை (innocent girl)

அன்று,

வஞ்சனைகள் கர்ஜிக்கும் கலியுகத்துக் காலமென்று
பால்நெஞ்சப் பசுமையைக் காத்திடென்றான் சான்றோன்.

பெண்ணேனும் வீரமுண்டு அறனோடு செயலுண்டு
கொடியோனைக் கரைத்திடும் தூயதோர் சிரிப்புண்டு

அவதூறு பொருத்திடா நேர்க்கொண்ட பார்வையுண்டு
கலக்கமேன் பெற்றோனே - பதிலளித்தாள் பாவை!

இன்று,

புழுங்கின்ற உள்ளும் நடுக்கின்ற வெளியும்
நடுநிசி நாய்போல் அலைக்கிறது அவள் மனதை

காண் தூரம் எங்கேனும் கனிவின்றி வரண்டிருக்க
நீர் தேங்கிய இமைகளும் தொப்பலென நிறைந்திருக்க

அழுகையினை சிரிப்பெனும் முகமூடி பிறைகொண்டு
திரும்பிடப் பாதையை தொலைந்தேங்கி நின்றாளப்பேதை..

Andru,

Vanjanaigal garjikkum kaliyugathu kaalamendru
paalnenja pasumaiyai kaathidendraan saandroan.

Pennaenum veeramundu, aranoadu seyalundu
kodiyoanai karaithidum thooyathoar sirippundu

Avathooru poruththidaa naerkonda paarvaiyundu
kalakkamaen petroanae - bathillalithaal paavai!

Indru,

Pulungindra ullum nadukkindra veliyum
nadunisi naai poal alaikkirathu aval manathai.

Kaan thooram engaenum kanivindri varandirukka
neer thaengiya imaigalum thoppallena nirainthirukka

Alugaiyinai sirippaenum mugamoodi piraikondu
thirumbida paathaiyai tholainthaengi nindraal appaethai...

No comments:

Post a Comment