Tuesday, April 16, 2013

சிக்கல் (confusion)


படருது படருது குழப்பங்கள் நெஞ்சுக்குள்ளே!

காற்றில் சுழலும் துகில்களென
மனதுக்குள் பின்னும் சிக்கல்கள்!

பழுக்கும் நோக்கங்கள் ஒன்றே
பாதைகள் என்றும் இணைந்திடா!

அனுபவங்கள் ஒன்று போல் தோன்றிடும்
பகுத்துப் பார்த்தால் சற்றும் ஒன்றிடா!

விடை இன்றோ என்றோ என்றெதிர்பார்த்தே
காலமும் முற்றி நரைக்கும்!

இது நிரந்தரமன்றே என்று சற்று நிதானித்து
அமைதி ஏய்திட ஒருபுறம் எண்ணினும்
பிணி கொள்ளும் அச்சமோ
மறுபுறம் அதிர்த்து எழுப்பும்!

ஓட்டமும் என்றும் ஓய்ந்திடா!

விடையும் என்றும் கிட்டிடா!



No comments:

Post a Comment