நான் கண்ட கனவு என்றும் வாழ்க்கை இனிப்பதற்கு
கண்ணாடி ஜன்னல் கண்ட கனவு வெண்கதிர் ஒளிர்வதற்கு
துளி நீர் கண்ட கனவு நிலைகொண்ட குளத்தில் கலப்பதற்கு
பசும் புல் கண்ட கனவு பாதையில்லா ஓரத்தில் விளைவதற்கு
தீ கண்ட கனவு ஈரப்பிசுக்கில்லா வரண்ட விறகுக்கு
கார் கண்ட கனவு ஓயாமல் இடிக்கும் மின்னலுக்கு
கார் கண்ட கனவு ஓயாமல் இடிக்கும் மின்னலுக்கு
மழலை கண்ட கனவு தாய் மார்பின் கதகதப்பிற்கு
மனைவி கண்ட கனவு கணவனின் இடைவிடா அன்பிற்கு
தோள் கண்ட கனவு நண்பனின் மன ஆறுதலுக்கு
கல் கண்ட கனவு காலங்கள் பல கழிவதற்கு
கனவு கண்ட கனவு அனைத்துமே நிகழ்வதற்கு
நிகழ்வு கண்ட கனவு நடக்கவிருப்பது நன்றாக நடப்பதற்கு
- பிரியதர்சினி செல்வகணேசன்

No comments:
Post a Comment