Monday, September 3, 2012

பிரியவளின் கவிதைக் காதல் - மறைவு (Clouded)

இருண்டு விரிந்து இருந்த காலம் அது
வெறுமையின் அழகும் ரசிக்கப்பட்டது 
நான் எனது தனிமையை பேணி 
மகிழ்ந்திருக்கும் பொழுது வந்தாய் நீ!

தூரத்தில் ஒளி தெரிய 
கண் விழிகளால் கூர்ந்து கண்டேன். 
நான் காணும் சிரமம் குறைக்க 
நீயும் சிறிது மறைவின்றி நின்றாய். 

உனது துணிவை நான் வேடிக்கையாக ரசிக்க, 
முன் சிறிது கோபம் கொண்டாய் 
பின் சிறிது வெட்கம் சூடினாய்
அதனால் உன்னை மறைத்தும் கொண்டாய்! 

வியந்தேன் உன் சிணுங்கலைக் கண்டு 
நாணினேன் என் உணர்வற்ற திறனால்
சிரித்தேன் உன் நளினத்தை எண்ணி 
எதிர்பார்த்திருந்தேன் என் வரத்தின் வருகைக்கு. 

நொடிகள் நீண்டு நிமிடம் ஆயின 
வருவாய் என்றெண்ணி காத்திருந்தேன்.
நிமிடங்கள்  நீண்டு  மணி நேரம் ஆயின
எனது தவிப்பு நிரந்தரமோ என்று கவலைக்கொண்டேன்.

வாழ்க்கை எனக்கு அங்கு நிற்கவில்லை 
அன்றாட பணிகளில் ஈர்ந்து சென்றேன்.
வெகு விரைவில் உன்னை மீண்டும் கண்டேன் 
அன்றுள்ள விழிகள் ஏனோ இன்று மீண்டும் இல்லை.

மன்னிப்பாயோ என் அழகு நிலவே?














7 comments: