உயிர்த்தெழுவோம்!
பிண்டம் உயிர் கொள்ளும் வெறும் சிசுவேன்றல்ல
மடமை கர்வம் கொல்லும் புது உறுதியென.
கொடுத்திருப்போம்!
சினச்சுடர் சீற்றி அவதூறு கடிந்தல்ல
நேசமும் பாசமும் வரையறையின்றி பகிர்ந்தளித்து.
நிறைந்திருப்போம்!
பொன்னும் பொருளும் மலையென குவித்தல்ல
உறவுகளும் நண்பர்களும் தந்த மகிழ் நினைவுகளோடு.
பேணிக்காப்போம்!
முன்னோர் கீறலிட்ட சாதி சமயச் சடங்குகளை அல்ல
தூயதோர் பனியின் உரு கொண்ட மாசின்மையை.

Good one :)
ReplyDeletenandri anna :)
ReplyDelete